மாணவர்களுக்கென முக்கடல் அணையில் அறிவியல் பூங்கா அமைப்பு
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, குமரியில் முக்கடல் அணையில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.;
முக்கடல் அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள அறிவியல் பூங்கா.
கன்னியாகுமரி மாவட்டம், முக்கடல் அணை பகுதியில், பள்ளி கல்லூரி மாணவர்களின் வசதிக்காக அறிவியல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின்னர், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து, இன்றைய தினம் முக்கடல் அணை பகுதியில் உள்ள அறிவியல் பூங்காவினை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். இதே போன்று நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள், அங்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக, அரங்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கான தளமும் அமைக்கப்பட்டு உள்ளது.