நவராத்திரி பூஜையை முன்னிட்டு திடீர் கடைகள் - விற்பனை படுஜோர்

நவராத்திரி பூஜையை முன்னிட்டு, குமரியில் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன; அவற்றில் விற்பனை அதிகரித்தது.;

Update: 2021-10-13 15:15 GMT

நாகர்கோவில் வடசேரி பகுதியில், சாலையோரம் கடையில் மும்முரமாக நடைபெற்ற பொரி விற்பனை.

பராசக்தியை வழிபடும் நாட்களான,  புரட்டாசி மாதம் வரும் தசமியின் முந்தைய 10 நாட்கள்,  நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்த நவராத்திரி விழா,  கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த வருடமும் நவராத்திரி விழா,  கடந்த ஆறாம் தேதி முதல் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகின்றது.  மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு அமைத்து,  நவராத்திரி விழாவை கொண்டாடி வரும் நிலையில்,  விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா,  நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், குமரியில் பூஜைக்கான பழங்கள் அவல், பொறி, பொரிகடலை மற்றும் பூக்களின் விற்பனை களை கட்டியுள்ளது, நாகர்கோவில் வடசேரி பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News