ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை - மாற்று வழியை தேர்ந்தெடுத்த பொதுமக்கள்

குமரியில் ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை உள்ளதால் மாற்று வழியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்.

Update: 2021-08-08 08:00 GMT

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடல், குழித்துறை தாமிரபரணி ஆறு, பாலாறு உள்ளிட்ட பகுதிகளில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யவும், நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

இதனை தொடர்ந்து கோவில் மண்டபங்களை தேர்ந்தெடுத்த பொதுமக்கள் அங்கு வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கோவிலின் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவிலில் உள்ள கல்மண்டபத்தில் தர்ப்பணம் செய்த பொதுமக்கள் தானுமாலயன் சுவாமி கோவிலில் வெளியே நின்றவாறு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News