குமரியில் ஓய்வூதியம் கோரி 16 இடங்களில் மறியல் - 1000 பேர் கைது

ஓய்வூதியம் வழங்காத நல வாரியத்தை கண்டித்து குமரியில் 16 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது; 1000-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

Update: 2021-12-02 12:30 GMT

மறியலில் ஈடுபட்ட சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர். 

சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல  இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏழைகள் வீடுகளை கட்ட ஏதுவாக,  கட்டுமான பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். தகுதியான கட்டுமான தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கு உடனடியாக மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. 

ராஜாக்கமங்கலம் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்,  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். இதே போன்று திங்கள்நகர், தக்கலை, மார்த்தாண்டம், மேற்புறம் உள்ளிட்ட 16 பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக பல்வேறு முக்கிய பகுதிகளில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Tags:    

Similar News