தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை: பிணை வழக்குகள் பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் 6 பேர் மீது நன்னடத்தை பிணை வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு மீண்டும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், பிணை வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதன் படி மாவட்டம் முழுவதும் குற்றவாளிகள் மீது தொடர் நடவடிக்கையாக வழக்கமான குற்றவாளிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள், சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் என அனைவர் மீதும் நன்னடத்தை பிணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு பிணை நிறைவேற்றபட்டது. இது வரை மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட வழக்கமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இதன் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவதோடு, அவர்களை நல்வழி படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.