மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்தாததால் பணிச்சுமை அதிகரிப்பு. குமரியில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்.

Update: 2021-12-03 14:15 GMT

குமரியில் முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு நடத்துவது போல முதுகலை மருத்துவப் படிப்பிற்கும் தனியாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த தேர்வை நடத்துவதற்கு மத்திய அரசு காலதாமதம் ஏற்படுத்துவதால் தற்போது பயின்று வரும் முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாகவும், இதனால் மனச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் பயிற்சி மருத்துவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க காரணமான முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு முதுகலை பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News