கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம், அதிக வேகம், 116 கனரக வாகனங்கள் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம், அதிக வேகம், காட்டிய 116 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-07-16 12:15 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்ட போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் அதிக வேகத்துடன் வருவதாலும் பெரும்பாலும் இப்படி வரும் வாகனங்கள் அனுமதி இன்றி கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகணங்களாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

மேலும் இது போன்ற வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வந்தது.

இந்நிலையில் அதிக பாரத்துடன் அதிவேகமாக வரும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்காணிப்பதோடு சோதனையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர், இந்நிலையில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த 116 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

இதே போன்று மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் ஒரே நாளில் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இன்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும், விதிமுறைகளை மீதியும் வந்த 2239 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலகுரக வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News