பள்ளி மாணவிகளிடையே போக்சோ சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல்துறை
குமரியில் பள்ளி மாணவிகளிடையே போக்சோ சட்டம் விழிப்புணர்வை குமரி மாவட்ட காவல்துறை நடத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தகுமரி விழுந்தையம்பலம் பகுதியில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பழக்கத்தை பழகிகொள்வதை தடுக்க என்ன செய்யவேண்டும், போதை பொருள்கள் பயன்படுத்துதல் சம்பந்தபட்ட தகவல்களை காவல்துறைக்கு அறிவித்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவல்களை மறைக்காமல் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தல் மற்றும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்துதலிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்து கூறியும், நடைமுறைகள் குறித்து விளக்கிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.