கொரோனா பரவலை தடுக்க காவல்துறை விழிப்புணர்வு

Update: 2021-04-24 17:45 GMT

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கபசுர குடிநீர் , முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருங்கல் காவல் நிலைய ஆய்வாளர் ரீனியஸ் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,

அதன் படி ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், வாடகை வாகன ஓட்டிகளுக்கு தங்களுடைய வாடகை வாகனத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறித்தும் விளக்கினார்கள், சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுபோன்று அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிந்து தான் செல்ல வேண்டும் என்று கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர், மேலும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கில் காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

Similar News