குலசேகரத்தில் கலப்பட பெட்ரோல் விற்பனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
குமரியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்த பெட்ரோல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
குலசேகரத்தில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்றதாக கூறி பொதுமக்கள் அதனை முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வினியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இதனிடையே இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டதில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்தது.
ஏற்கனவே பலமுறை இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் வாகனங்கள் பழுதால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.