கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு பாதுகாப்பு வசதியுடன் பள்ளிகள் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் முழு பாதுகாப்பு வசதிகளுடன் திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டது.
அரசு உத்தரவுப்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் உடல் வெப்பநிலை கணக்கீடு செயயப்பட்டு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு முக கவசம் சோதனைக்கு பிறகே அனைவரும் பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக சுமார் 16 மாதங்கள் பள்ளிகள் அடைக்கப்பட்டு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர்.