குமரியில் ஒருவருக்கு ஓமிக்கிரான் தொற்று - பொதுமக்கள் கவலை
குமரியில் ஒருவருக்கு ஓமிக்கிரான் தொற்று கண்டறியபட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.;
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளி நாட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த நிலையில், அந்த வாலிபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த, அவரது தாயாரை பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேரும் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்,
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் பெண்ணுக்கான பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, மாவட்ட மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.