ஊரடங்கை மீறாத குமரி மக்கள்:
ஊரடங்கை மீறியதாக குமரி மாவட்டத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் வருபவர்கள், இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக மாவட்டத்தின் எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காலங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகமாகவே உள்ளது. ஊரடங்கு மீறியதாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை.
எனவே பொதுமக்கள் அரசின் விதி முறைகளை கடைபிடித்து தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் விரைவாக கொரோனாவில் இருந்து மாவட்டம் மீளும் என்று கூறினார்