குமரியில் மகா ம்ருத்யுஞ்சய ஹோமம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா ம்ருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது.;
உலக நன்மைக்காகவும் கொரோனா நோய் தொற்றில் இருந்து உலகம் விடுபடவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் நடத்தப்பட்டது.
உலக நன்மைக்காகவும் கொரோனா நோய் தொற்றில் இருந்து உலகம் விடுபடவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளில் கடந்த 41 நாட்களாக எள் கொண்டு பூஜை நடத்தப்பட்டு வந்தது. அதன் படி பூஜிக்கபட்ட எள் உட்பட திரவியங்கள் குழித்துறை திப்பிலங்காடு மஹா தேவர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. வேத விற்பன்னர்களின் வேத மந்திரம் முழங்க நடைபெற்ற இந்த ஹோமத்தில் ஆன்மீக பெரியவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனத்துடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.