கன்னியாகுமரி மாவட்டத்தில் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு
குமரியில் கிருஸ்துமஸ் ஈவ் திருநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.;
கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான கிறிஸ்துமஸ் ஈவ் திருநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வெள்ளி கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 2022 ஜனவரி 8 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.