குமரியின் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
குமரியின் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமையும் புகழும் பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில்.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலுக்கு அடித்தப்படியான கோவில் இது என்பதால் இந்த கோவில் குமரியின்குருவாயூர் என்று அழைக்கப்படுகிறது.
கேரளா ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெறும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளல் மற்றும் பவனிவருதல் நிகழ்ச்சியும், திரு தேரோட்டம் மற்றும் பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் நடைபெறும்.