முன் உதாரணமாக திகழும் குமரி காவல் கண்காணிப்பாளர்
அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழும் குமரி காவல் கண்காணிப்பாளர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹரிகிரண் பிரசாத் பதவியேற்ற போது தனது பெற்றோருக்கு மரியாதை செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த சைக்கிள் போட்டியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், அவரது மனைவி விஷாலா ஹரியும் கலந்துகொண்டனர். இதில் விஷாலா ஹரி இரண்டாவது பரிசை பெற்றார், மேலும் ஹரிகிரண் பிரசாத் மற்றும் அவரது மனைவி விஷாலா ஹரிஆகியோர் தங்களது மகன் நஸ்ரித்தை கவிமணி அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறார். போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை அதிக அளவில் ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீசாருக்குதயார் செய்து வைக்கப்பட்டிருந்த காலை உணவை அவர்களுடன் வரிசையில் நின்று சாப்பிட்டு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். பொதுமக்களோடு மக்களாக நன்கு பழகி, அவர்களோடு வாக்கிங் சென்றும், தன்னை தேடி புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவாக நடந்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் ஒரு முன் உதாரணமாக இருந்து வருகிறார் என்று பலரும் கூறுகின்றனர்.