நாங்க இருக்கோம், பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்கலாம்: குமரி எஸ்.பி.
பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம். பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்கலாம் என குமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.;
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், வாக்குச்சாவடி ஒன்றை பார்வையிட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்று உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பதட்டம் இல்லாமல் தங்கள் வாக்குகளை செலுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 55 இடங்களில் 173 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு. அவற்றினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் அவர் கூறியதாவது, மக்கள் பயம் இல்லாமலும், பதட்டம் இல்லாமலும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்களிக்க ஏதுவாக, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஏனைய பணியில் உள்ள காவலர்களை தவிர கூடுதலாக காவலர்கள் நியமிக்கபட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே போடப்பட்டுள்ள பறக்கும் படைகள் தவிர மேலும் 155 பறக்கும் படைகள் போடப்பட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.