குமரியில் வாகன சோதனையின் போது சிக்கிய பிரபல திருடர்கள்

குமரியில் போலீசாரின் வாகன சோதனையின் போது பிரபல வாகன திருடர்கள் சிக்கினர்.

Update: 2021-08-30 13:15 GMT

கன்னியாகுமரியில் வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சார்ந்த ராமநாதன் என்பவர் மகன் வசனம்பெருமாள், இவருக்கு சொந்தமான ஒரு மினி டெம்போ உள்ளது.

இதனை அவரது மகன் வேலு என்பவர் ஓட்டி வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி இரவு 10.30 மணிக்கு வீட்டின் அருகே வழக்கம் போல் தனது வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்ற வேலு மறுநாள் காலை 5 மணிக்கு வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்த போது வாகனத்தை காணவில்லை என்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

எவரேனும் வாகனத்தை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது போன்று கடந்த மாதம் அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, போன்ற பகுதிகளிலிருந்து மினி டெம்போ, திருடு போனது.

இதே போன்று சுசீந்தரம் ஆசாரிப்பள்ளம் போன்ற பகுதியில் பயணிகள் ஆட்டோ திருடப்பட்டிருந்தது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் மீனா தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மாரிச்செல்வம் ஆகிய அடங்கிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதில் ரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அங்கு வந்த பொட்டல்குளம் பகுதியைைச் சேர்ந்த முத்துசுவாமி என்பவர் மகன் முருகன் ( 56 )மற்றும் வில்லுகுறி நெடுவிளை பகுதியை சார்ந்த தங்கநாடார் என்பவர் மகன் கனகராஜ் ( 46 ) ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் பல இடங்களில் வாகனங்களை திருடியது தெரியவந்து. பிடிப்பட்ட இவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படைையில் திருடிய வாகனங்களான 3 மினி டிம்போ மற்றும் 2 பயணிகள் ஆட்டோ பல பகுதிகளில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் திருடு போன வாகனங்கள் மற்றும் பல பகுதிகளில் திருடு போன சுமார் 16 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News