கன்னியாகுமரி: பத்திரிகையாளர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் உதவி!

கன்னியாகுமரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலனில் அக்கறை கொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முககவசம், சேனிடைசர் வழங்கியது.

Update: 2021-06-06 09:00 GMT
கன்னியாகுமரி பத்திரிகையாளர்களுக்கு இந்தியன் ரெட்சிராஸ் சங்கம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியபோது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

நோய் தொற்றின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தன்னலத்தை மறந்து பொது நலத்துடன் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக துறையினருக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கிருமி நாசினிகள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

மாவட்டம் முழுவதும் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் வகையில் நாகர்கோவில் பிரஸ் கிளப், மார்த்தாண்டம் பிரஸ் அசோஷியேஷன் பத்திரிக்கையாளர்கள் அமைப்பிடம் வழங்கப்பட்ட இந்தக் கிருமி நாசினிகள் மற்றும் முகக் கவசங்கள் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News