கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முதல் அலையில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 ஆம் அலையில் இளம் வயதினர் மற்றும் சிறுவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் குமரி மாவட்டத்தில் முதல் கட்டத்தை விட தற்போது இரண்டாவது அலையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக காணப்படுகிறது. இரண்டாவது அலையின் தீவிரம் கடந்த மூன்று வாரத்திற்கு முன்புதான் தொடங்கியுள்ளது.
தொடக்கத்தில் தினமும் இரண்டு இலக்கத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு மூன்று இலக்க எண்ணாக மாறியிருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதித்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் மொத்தம் 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.