கன்னியாகுமரி: 24 மணி நேரத்தில் 13 பேர் பலி
குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 13 பேர் பலி - சுகாதாரத்துறை தகவல்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருக்க உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது வரை தினமும் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக இரட்டை இலக்க எண்ணில் உள்ளது.
தினமும் 10 முதல் 15 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நேற்று காலை முதல் இன்று சனிக்கிழமை காலை வரை மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மாவட்டத்தின் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 488 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.