குமரியில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு 5 சவரன் தங்க நகை கொள்ளை

குமரியில், கோவில் பூட்டு உடைக்கப்பட்டு 5 சவரன் தங்க நகை கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-10-20 15:00 GMT

 நகை திருடு போன கோவில்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் ஐயன்விளை பகுதியில் அமைந்துள்ளது,  பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில். வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு,  நேற்று இரவு கோவில் நடை சாத்தப்பட்டு கோவில் பூஜாரி மற்றும் நிவாகத்தினர் சென்றுள்ளனர்.

இன்று காலை கோவில் நடையை திறக்க பூஜாரி வந்த போது,  3 கோவில் நடைகள் திறக்கப்பட்டு கோவிலினுள் வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார், கோவில் நிர்வாகத்தினர் கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடம் வந்த கருங்கல் போலீசார்,  கோவிலினுள் சென்று பார்த்தனர். கோவிலினுள் இருந்த அம்மன் சிலையில் சாத்தப்பட்டிருந்த 5 அம்மன் தாலி சங்கிலிகள், 3 செயின்கள், 2 கண்விழி,1 நெற்றி பொட்டு என மொத்தமாக 5 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள கொள்ளையடித்து சென்று இருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News