குமரியில் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை: பாெதுமக்கள் மகிழ்ச்சி
கடும் வெப்ப சலனத்திற்கு இடையே குமரியில் 3 மணி நேரமாக வெளுத்து வாங்கியது கனமழை.;
வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் உருவாகி குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனிடையே நாகர்கோவில், தக்கலை, ஆரல்வாய்மொழி, திங்கள் நகர் உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழையால் குமரியில் வெப்பம் முழுமையாக நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் தற்போது பெய்து வரும் கனமழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.