'குமரியில் கொட்டும்' : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரியில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆயவு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-05-14 10:30 GMT

தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது,

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பலத்த மழை நீடித்து வருகிறது, நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பெய்து வரும் மழையால் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது, இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போன்று அணைகள் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும் தொடரும் மழையால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Tags:    

Similar News