விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்துக்களின் முதன் முதல் கடவுளான விநாயகரின் சதூர்த்தி விழா இரண்டு நாளில் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று, அதன்படி குமரியில் ஒவ்வொரு வீடுகள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவர்.
இந்நிலையில் இந்த வருடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வீதிகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் ஈடுபடவும் விசர்ஜன ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இந்து அமைப்புகள் தடையை மீறி விநாயகர் சிலை அமைக்கவும் ஊர்வலம் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் கொண்டாட்டம், பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் குமரிமாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன் படி இன்று இரவு முதல் முக்கிய சந்திப்புகள், முக்கிய பகுதிகள் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளத்தோடு வாகன சோதனையையும் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.