கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் நியமனம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.;
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக சென்னை தி. நகர் உதவி ஆணையராக இருந்த ஹரி கிரண் பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ள பத்ரி நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் போது போதை பொருட்கள் மற்றும் கஞ்சாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொண்டவர்.
மேலும் தனது அன்பான அணுகுமுறையால் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிட தக்கது.