இரண்டு மடங்கு மழை பெய்தும் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை : மாவட்ட ஆட்சியர்
மரங்கள் அளிக்கப்படுவதால் இரண்டு மடங்கு மழை பெய்தும் நிலத்தடி நீர் உயரவில்லை என மாவட்ட ஆட்சியர் ஆதங்கம் தெரிவித்தார்;
கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உலக வன நாள் மற்றும் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். பின்னர், மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற சதுரங்க விளையாட்டில் மாவட்ட ஆட்சியரும் பங்கேற்றார்.தொடர்ந்து பேசிய அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இரண்டு மடங்கு மழை பெய்தும் நிலத்தடிநீர் மட்டம் அதிகரிக்கவில்லை. குறிப்பிட்ட சில தினங்களில் மழை அதிக அளவில் பெய்ததால் தண்ணீர் தேங்காமல் வீணாகும் நிலை ஏற்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் பருவகால சூழ்நிலை மாற்றம் தான், குறிப்பாக காடுகள் மற்றும் மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் தண்ணீரை சேமித்து வைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. .எனவே பள்ளி மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க பெற்றோரை வற்புறுத்த வேண்டும்.அதே போன்று பொது இடங்களிலும் வீடுகளிலும் அதிக அளவில் மரம், செடி, கொடிகளை வளர்க்க முன் வர வேண்டும் என்று கூறினார், பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார் ஆட்சியர்.