குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட மீனவர்கள்
குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட மீனவர்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கன்னியா குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தமிழக மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் துவங்கி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வரையிலான பல இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், வாணியக்குடி பகுதியை சேர்ந்த, ஏற்கனவே கடலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கும்பலாக பங்கேற்றதோடு, முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டிருந்தனர்.
அது மட்டுமின்றி மேடையில் இருந்தவர்களும் முக கவசம் அணியாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.மேலும், கொரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறும் பொதுமக்களை விரட்டி விரட்டி வழக்குப் பதிவு செய்யும் போலீசார்
இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், இவற்றை கண்டு கொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.