குமரி: நடனமாடி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்ற சீனியர் மாணவர்கள்

குமரியில், நடனமாடி, முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரவேற்றனர்.

Update: 2021-11-08 13:15 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக,  கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடந்து, கல்லூரி மற்றும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு கட்டுபாடுகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கின. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் செயல்படும் ஸ்டெல்லாமேரிஸ் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளுக்கு வந்த மாணவ மணவிகளை, ஆசிரியர்கள் மற்றும் சீனியர் மாணவ மாணவிகள் பூங்கொத்து கொடுத்தும், மலர்கள் தூவியும், நடனமாடியும் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிகழ்ச்சி முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளிடையே உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News