மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீ - மூலிகை மரங்கள் கருகின
குமரியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட தீயால், மூலிகை மரங்கள் தீயில் கருகின.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், நேற்று முன்தினம், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக, தீயானது வேகமாக பரவி பல அரிய வகை மூலிகைகள் மற்றும் மரங்களில் பிடித்ததால், காட்டு தீயாக மாறியது.
பொதுமக்கள் இது குறித்து வனதுறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் இரவு நேரம் என்பதாலும் மலையின் உயரமான இடத்தில் தீ பிடித்து இருப்பதாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையே ஏற்பட்டது.