கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

குமரியில் மழையால் நெற்பயிர்கள் சேதமான நிலையில், இழப்பீடு வழங்க வேண்டும் என்று, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-19 13:00 GMT

குமரி மாவட்டத்தில், மழையால் சேதமடைந்த பயிர்கள். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நெல் வயல்கள் உள்ளிட்ட விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.

முதல் பருவ நெல் சாகுபடியில் பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நெல் பயிற்கள் தண்ணீரில் மூழ்கியது, இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். செண்பகராமன்புதூர், தாழக்குடி, இறச்சகுளம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கியதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகின்றன.

வீட்டில் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்ததாகவும், பேரழிவில் மாட்டிக்கொண்டோம் என கூறிய விவசாயிகள்,  இழப்பீடுகளை வழங்கி காப்பாற்றுமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News