குமரியில் 31.21 % பேர் வாக்களிக்கவில்லை

Update: 2021-04-09 10:45 GMT

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 31.21 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்ற போதிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 4 லட்சத்து 90 ஆயிரத்து 444 வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வருகை தரவில்லை.கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வெயிலின் தாக்கம், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக சென்று சேராதது உள்ளிட்ட காரணங்கள் வாக்குப்பதிவு சதவீதம் குறைய காரணம் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த முழுமையாக நிலவரம் வெளியானது. அந்த வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 943 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 லட்சத்து 19 ஆயிரத்து 643 பேர் வாக்களித்துள்ளனர்.

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 402 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 133 பேர் வாக்களித்துள்ளனர்.குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 424 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 517 பேர் வாக்களித்துள்ளனர்.

விளவங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 853 பேர் வாக்காளர்கள் இருந்த நிலையில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 651 பேர் வாக்களித்துள்ளனர்.கிள்ளியூர் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 199 வாக்காளர்கள் இருந்த நிலையில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 839 பேர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.குமரி மாவட்டம் முழுவதும் 4.90 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News