குமரியில் கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் தடுப்பு விழிப்புணர்வு
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து குமரி மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் இன்று இந்து கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் சைபர் கிரைம் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், மற்றும் கோட்டார் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர் இணையவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இணையவழி குற்றங்கள் நடந்தால் புகார் அளிக்க வேண்டிய *http;//cybercrime. gov. in* லிங்கு குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் மூலமாக பணத்தை இழக்க நேரிட்டால் *155260* என்ற எண்ணிற்கு உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.
மேலும் ஆன்லைன் மூலமாக அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருகிறோம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று கூறி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.