கொரோனா நான்காவது அலை வரவே வராது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா நான்காவது அலை வரவே வராது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-03-20 14:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியம் பல்வேறு இடங்களை ஆய்வு செய்ததோடு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், சிறார்கள் என அனைத்து வயது தரப்பினருக்கும் தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடத்தில் சிறந்து விளங்குகிறது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்று நோய்க்கு என்று சிறப்பு சிகிச்சைக்காக அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவில் குமரி மாவட்டத்தில் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

தற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு இருந்தாலும் உண்மையான காரணங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்படும், இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான மன அழுத்தத்தை குறைக்க கூடிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நான்காவது அலை வரவே வராது என்றார் அமைச்சர் சுப்பிரமணியன். 

Tags:    

Similar News