குமரியில் தொடர் மழை எதிராெலி: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
குமரியில் மலையோர பகுதியில் தொடரும் கனமழை காரணமாக 3 ஆவது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மலையோர பகுதிகளில் தொடர் மழை பொய்து வருகிறது. இதனால் முக்கிய அணை பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது.
இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 44 அடியை எட்டியதை அடுத்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து தடுப்புகளை தாண்டி கொட்டுகிறது. மேலும் திற்பரப்புநீர் வீழ்ச்சியில் வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் தாமிரபரணி ஆற்றின்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மலையோர பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்வதால் அணை பகுதிகளில் பொதுபணிதுறையினர் முகாமிட்டு நீர் வரவுக்கு ஏற்ற போல் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.