குமரியில் கனமழையால் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
குமரியில் தொடரும் கனமழையால் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக தொடர் கனமழை பெய்து வருவதோடு அரபிக்கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடபட்டு உள்ளது.
இந்நிலையில் தேங்காய்பட்டிணம், மற்றும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க மீன்பிடிக்க செல்லும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள் தேங்காய்பட்டிணம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இருந்து வரும் பருவநிலை மாற்றம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.