பெகாசைஸ் விவகாரம்: குமரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல் கட்சி தலைவர்கள், முன்னணி பத்திரிகைகளின் தொலைபேசியை பெகாசைஸ் ஸ்பைவேர் செயலி மூலம் ஒட்டு கேட்பதாக தகவல் பரவியது;
மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முன்னிலை பத்திரிக்கைகளின் தொலைபேசி அழைப்புகளை, பெகாசைஸ் ஸ்பைவேர் செயலி மூலம் ஒட்டு கேட்பதாக நாடு முழுவதும் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக குமரி மேற்கு மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற துணை தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.