புகார் பெட்டி: குமரிமாவட்ட காவல்துறை புது முயற்சி
பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் புகார் பெட்டி - குமரிமாவட்ட காவல்துறை புது முயற்சி.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் எளிதான முறையில் காவல்துறையுடன் தொடர்பு கொள்ள புதிய முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தல் படி காவல்நிலைய வாயிலில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. முதன் முறையாக குளச்சல் உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி அவர்கள் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றினை புதுக்கடை பகுதியில் உள்ள பழைய காவல் நிலைய வளாகத்தில் திறந்து வைத்தார்.
மாவட்ட காவல் துறையில் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை எளிதில் தெரியப்படுத்த இது உதவும் என்பதால் காவல்துறையின் இந்த புதிய முயற்சி அனைத்து தரப்பினரின் பாராட்டுதலை பெற்று உள்ளது.