குமரியில் தீவிர வாகனத்தணிக்கை: 108 கனரக வாகனங்கள், 2492 நபர்கள் மீதுபோலீஸார் வழக்கு

குமரிமாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 600 -க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் 20,000 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-07-12 13:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிக வேகத்துடன் வரும் கனரக வாகனங்கள் மற்றும் இலகு கரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்துநடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி, குமரிமாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் அதிக பாரம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த 108 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தலைக்கவசம் அணியாமல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வலம் வந்த 2492 வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் குமரிமாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் 20,000 -கும் மேற்பட்ட விதிமுறை மீறல் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News