இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்

கோழிக்கோடு அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகத்தில் வந்த கார் மோதி இருவர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-05-17 08:30 GMT

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பூவாண்டு பறம்பு என்ற பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

இதனிடையே சாலையில் அதி வேகத்தில் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டடுள்ளனர். இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்ட பொதுமக்கள் அவர்களை சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கோழிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விபத்து குறித்த பதபதைக்க வைக்கும்  CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Tags:    

Similar News