குமரியில் தொடரும் தீவிர கஞ்சா வேட்டை - 6 நாளில் 57 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையால் தொடரும் தீவிர கஞ்சா வேட்டையில் 6 நாளில் 57 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-07-01 14:30 GMT

கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிராகவும் குறிப்பாக கஞ்சவிற்கு எதிரான தொடர் நடவடிக்கையில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் கஞ்சா வேட்டையில் ஈடுபட காவலர்களை ஊக்கப்படுத்தினார்.

தொடர்ந்து மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது, இந்நிலையில் தனிப்படையினர் மற்றும் போலீசாரின் தொடர் நடவடிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் 57 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காவல்துறையின் தொடர் நடவடிக்கையால் கஞ்சா விற்பனை கும்பல் கதி கலங்கி நிற்கும் நிலையில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் துறைக்கு தங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News