குமரியில் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

குமரியில் பள்ளி மாணவியருக்கு காவல் துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2021-11-24 13:45 GMT

குமரியில் பள்ளி மாணவியருக்கு காவல் துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் போக்சாே சட்டம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடையே ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜானகி வெள்ளியாவிளை பகுதியில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் போக்சோ சட்டம் குறித்தும், மொபைல் போனை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்தும், மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News