போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயற்சி

-3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

Update: 2021-04-18 18:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த அனந்த நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மார்பிள். இவரது மனைவி வினிமோள். எம்பிஏ பட்டதாரியான இவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிலம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியில் உள்ளது. இந்த இடம் மற்றும் வீட்டை அதே பகுதியை சேர்ந்த சசிகுமார், அலோசி பிள்ளை, மற்றும் பல்தாசன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வினிமோள் மாவட்ட எஸ்பி யிடம் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News