குமரி மாவட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை

அரசு உத்தரவுப்படி குமரி மாவட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது.;

Update: 2021-08-07 13:45 GMT

தமிழகத்தில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய இந்து அறநிலைய துறை உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழிலில் அர்ச்சனை செய்யப்பட்டது.

புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு கொன்றையடி ஶ்ரீ தாணுமலையான் சுவாமி சன்னிதியில் பக்தர்கள் தரிசனத்தின் போது தமிழில் அர்ச்சனை செய்யப்ட்டது.

இதே போன்று நாகராஜா கோவில், குமரி பகவதி அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெற்றது.

Tags:    

Similar News