குமரிக்கு சரக்கு ரெயிலில் வந்த 3100 டன் அரிசி, கோதுமை
குமரிக்கு பொதுமக்களுக்கு விநியோகிக்க சரக்கு ரெயிலில் 3100 டன் அரிசி, கோதுமை வந்தது.;
சரக்கு ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்ட உணவு தானியங்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட இருக்கும் கோதுமை பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வருவது வழக்கம். மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் இந்த கோதுமை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி சரக்கு ரயில் மூலமாக கன்னியாகுமரி மாவட்டம் கொண்டுவரப்பட்ட 3100 டன் கோதுமை நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த கோதுமையானது நாகர்கோவில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் வைக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.