கனிமவளம் கடத்திய 21 லாரிகள்: போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்

அதிகாரிகள் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கிறது;

Update: 2021-07-31 13:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக கேரளாவிற்கு மலைப்பாறைகள், பாறை பொடிகள், ஜல்லிகள் உள்ளிட்ட கனிம வளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வருகின்றன. தினமும் 300 முதல் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலமாக, இந்த கடத்தல் தொடர்ந்து வந்த நிலையில், இதனை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருபுறம் அதிகாரிகள் ஆதரவுடன் தான் கனிமவளம் கடத்தல் நடைபெறுகின்றது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில்,  மறுபுறம் அதிகாரிகளின் சோதனையில் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. இதனிடையே அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி கொண்டு சென்ற வாகனங்களை மடக்கி பிடித்த போலீசார் வாகனங்களை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, கனிம வளங்கள் கடத்தலில் ஈடுபட்ட 21 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News