குமரி மாவட்டம் புதுக்கடையில் மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
புதுக்கடையில் மண் கடத்திய 2 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.;
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அனுமதி இன்றி அதிக அளவில் மண் கடத்தப் படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இந்நிலையில் குமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரி ஸ்ரீகுமார் தலைமையில் புதுக்கடை சந்திப்பு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டெம்போவில் அனுமதியின்றி மண் எடுத்து செல்லப்பட்டதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அதற்கான அரசு அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாததால், பிடிபட்ட மண்ணுடன் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை புதுக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.