காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி - எம்எல்ஏ சுந்தர்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார் மற்றும் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மின்னஞ்சல் மற்றும் செயலியை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அறிமுகப்படுத்தி உள்ளார்.

Update: 2021-06-20 06:15 GMT

புகார் தெரிவிக்க எம்எல்ஏ சுந்தர் வெப்சைட்டை உருவாக்கினார்.

 காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயல்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் , உத்திரமேரூர் , மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் இன்று வெளியிட்ட செய்தியில் ,  தெற்கு  மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை புகார் மற்றும் கருத்துக்களை கீழ்க்கண்ட இணைய தளத்தில்  பதிவு செய்யலாம் எனவும் அல்லது mail@ksundar.com மின்னஞ்சல் https://www.ksundar.com/request மூலமாகவும் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News