செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ, பெண் போலீஸ் உயிரிழப்பு

செங்கல் பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவல்துறையினர் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர்.;

Update: 2024-11-04 12:30 GMT

விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ

வழக்கு சம்பந்தமாக சென்ற பெண் காவல் உதவியாளர், பெண் காவலர் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் உயிர் இழந்த சம்பவம் காவல்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ , காவலர் நித்தியா ஆகியோர் வழக்கு சம்பந்தமாக இன்று அதிகாலை சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ் நித்தியா.

அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம்,  மேல்மருவத்தூர் அருகே சிறு நாகலூர் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதி இழுத்துச் சென்றுள்ளது/ இதில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த மற்றொரு பெண் காவலர் நித்தியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.சிறிது நேரத்திலேயே  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விபத்தில் இறந்த இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மதன் குமாரை போலீசார்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்டு இரண்டு நபர்களின் உடல்களும் உறவினர்களிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது கண்ணீர் மல்க காவல்துறையினர் உறவினர்கள். உடல்களை பெற்றுக் கொண்டனர்.

இதில் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ உடல் மதுரைக்கும் மற்றும் ஒரு பெண் காவலர் உடல் திண்டுக்கல் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News